Begin typing your search above and press return to search.
பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
பாலமேடு அருகே 66.எம்.பள்ளபட்டி கிராமத்தில் ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
HIGHLIGHTS

பாலமேடு தொட்டிச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
பாலமேடு அருகே 66.எம்.பள்ளபட்டி கிராமத்தில் ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே 66.மேட்டுப்பட்டி உட்கடை பள்ளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மங்கல இசை முழங்க இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கருப்பையா பூசாரி, ஒய்யன் பங்காளிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.