/* */

மதுரை அருகே மின்சாரம் அடிக்கடி துண்டிப்பு: தேர்வு எழுதும் மாணவர்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால் மாணவர்கள் அவதி

HIGHLIGHTS

மதுரை அருகே மின்சாரம் அடிக்கடி துண்டிப்பு: தேர்வு எழுதும் மாணவர்கள் அவதி
X

சோழவந்தான் பகுதியில் ஏற்பட்டு வரும் மின்தடையால்  படிக்க அவதிப்பட்ட மாணவர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில்கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக, சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் விநாயகபுரம் காலனியில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் மரங்கள் ஒடிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக அதை, மின்சார வாரியம் சரி செய்யாமல் இருப்பதால், பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் உட்பட பலர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தொடர்ந்து, மழை பெய்து வருவதால் விஷஜந்துக்கள் உள்ளிட்டவை வீட்டுக்குள் வரும் அபாயம் உள்ளது.கடந்த இரண்டு வருடங்களாக கொரொனா பேரிடர் காலத்தில் பள்ளி நடைபெறாமல் இருந்ததால், மாணவர்கள் மிகுந்த மனச்சுமையுடன் சென்று வருகின்றனர்.தற்போது, 12 ஆம் வகுப்புகள் உட்பட அரசு பொதுத் தேர்வுக்கு படிக்கும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் .கை க்குழந்தை வைத்திருப்பவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.4 நாட்களாக மின்சாரம் தடைபட்ட சூழ்நிலையில், மின்வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது. உடனடியாக சரி செய்ய இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 5 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?