/* */

மதுரை அருகே பாலமேட்டில், திமுகவில் இணைந்த அதிமுகவினர்: அமைச்சர் வாழ்த்து

admk persons joined to dmk party,minister congrats மதுரை மாவட்டம் பாலமேட்டில் 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆளும் கட்சியான திமுகவில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் இணைந்தனர். அவர்களுக்குஅமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மதுரை அருகே பாலமேட்டில்,  திமுகவில் இணைந்த அதிமுகவினர்: அமைச்சர் வாழ்த்து
X

பாலமேடு பேரூர் அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

admk persons joined to dmk party,minister congrats

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் அவ்வப்போது மாறி மாறி மாற்று கட்சிகளில்இணைவது என்பது தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது. ஆளும்கட்சி மாறிவிட்டால் இதுபோன்ற காட்சிகள் அரங்கேறுவது வாடிக்கையான ஒன்று. அதேபோல் ஆளும் கட்சியில் இருந்தும் மாற்று கட்சிக்கு கோஷ்டிப்பூசலால் மாறுவது என்பதும் தொடர் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மதுரை பாலமேட்டில் அதிமுக அணியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் திமுகவில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் இணைந்தனர்.

மதுரை மாவட்டம், பாலமேட்டைசேர்ந்த அதிமுக நிர்வாகிகள், அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.அதிமுக மாவட்ட பிரதிநிதி சோ.லெட்சுமணன், அம்மா பேரவை செயலாளர் ராமராஜ், பேரூர் துணைச் செயலாளர் ஏ.கே. தனசேகரவேல் பாண்டியன், தொடக்கக் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணியரசன், மற்றும் ஜவகர் உட்பட 50 க்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ,அமைச்சர் மூர்த்தி, கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றார்.இதில், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக மாவட்ட அவைத் தலைவர் பாலமேடுஎம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகரச்செயலாளர் மனோகரவேல் பாண்டியன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் உள்ளனர்.

Updated On: 23 Jan 2023 9:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’