/* */

நிலக்கோட்டை, வாடிப்பட்டி பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்

உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடிடும் வகையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

HIGHLIGHTS

நிலக்கோட்டை, வாடிப்பட்டி பகுதிகளில்  பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்
X

நிலக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்.

உயர் நீதிமன்ற வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதையொட்டி, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுக துணை பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், நத்தம் இரா.விசுவநாதனின் அறிவுறுத்தலின்படி, மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர், நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோரின் ஆர்.வி.என்.கண்ணன் ஆலோசனைபடி இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.

நிலக்கோட்டையில்.. கிழக்கு ஒன்றியச் செயலாளர் பி.யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.நல்லதம்பி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோரின் தலைமையில், பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடிடும் வகையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.சி. பாலசுப்ரமணியம்,கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் தவமணி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் பாலசுப்ரமணியம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், முன்னாள் ஊராட்சி குழு தலைவர் மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன் உள்ளிட்டகட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து நிலக்கோட்டை சாலையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வாடிப்பட்டியில்.. பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச்செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். பாசறை மாவட்ட துணைச்செயலாளர் மணிமாறன், கோட்டைமேடு பாலன், நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுந்தர்ராஜன, ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வதர்மர், ஜெயராமன், பிச்சை, குழந்தைவேல், பாண்டி,மூர்த்தி பிரசன்னா, தென்கரை நாகமணி உட்பட பலர் கலந்து கொண் டனர்.

Updated On: 29 March 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி