/* */

வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் வசதி

நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் ஏப்ரல் 15 முதல் இயக்கப்பட இருக்கிறது

HIGHLIGHTS

வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் வசதி
X

வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் வசதி & எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில்

வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் வசதி

கொரோனா தொற்றுக்கு பிறகு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் முன்பதிவு இருக்கை வசதி பெட்டிகளாக மாற்றப்பட்டிருந்தன. தற்போது படிப்படியாக பல்வேறு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் வசதி மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 3 முதல் மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் (12651), மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687), ராமேஸ்வரம் - அயோத்தியா கன்டோன்மென்ட் விரைவு ரயில் (22613), தூத்துக்குடி - ஓகா விவேக் விரைவு ரயில் (19567), ராமேஸ்வரம் - புவனேஸ்வர் விரைவு ரயில் (20895), திருநெல்வேலி - பிலாஸ்பூர் விரைவு ரயில் (22620),

ஜூலை 4 முதல் திருநெல்வேலி - ஜம்மு ஸ்ரீ வைஷ்ணவி தேவி கட்ரா விரைவு ரயில் (16787), திருநெல்வேலி - ஜாம்நகர் விரைவு ரயில் (19577), ஜூன் 30 முதல் திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் (11022), ஜூலை 1 முதல் மதுரை - மும்பை லோக்மான்ய திலக் முனையம் விரைவு ரயில் (22102), ராமேஸ்வரம் - ஓகா விரைவு ரயில் (16733), ஜூலை 6 முதல் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயில் (22535), கொங்கன் ரயில்வே வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் (22630), அகியவற்றில் முன்பதிவு இருக்கை வசதி பெட்டிகள் பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

மேலும் ஜூலை 1 முதல் கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில் (12641), நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி விரைவு ரயில் (16340), ஜூன் 30 முதல் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி விரைவு ரயில் (16352) ஆகியவற்றில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில்

கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் ஏப்ரல் 15 முதல் இயக்கப்பட இருக்கிறது. எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) சென்னையிலிருந்து ஏப்ரல் 15 முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் (12690) நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்று சேரும். நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை செல்லும் விரைவு ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நிற்காது. கூடுதலாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

Updated On: 6 April 2022 6:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...