Begin typing your search above and press return to search.
மதுரை பகுதி கோயில்களில் ராமநவமி விழா கோலாகலம்
மதுரை சுற்றுவட்டாரப்பகுதி கோயில்களில் ராமநவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ராமபிரான்.
மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியா திருக்கோவிலில் ராமநவமியை முன்னிட்டு, நேற்று லக்ஷ்மி நாராயணர், சஞ்சீவி ஆஞ்சநேயர், யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல், மதுரை அருகே சோழவந்தான் சந்தானகிருஷ்ணன் கோபால்சாமி திருக்கோவிலில் ராம பக்த சபை சார்பில் ராமநவமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மதுரை, மதனகோபால சுவாமி ஆலயத்தில் ராம நவமியை ஒட்டி நடந்த சிறப்பு அபிஷேகத்தை ஏராளமான மக்கள் தரிசித்தனர். கலைநிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.