/* */

பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு நலத்திட்டம்

அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற 402 பணியாளர் களுக்கு ரூ.145.57 கோடி மதிப்பீட்டில் பணப்பலன்கள் வழங்கப்பட்டன

HIGHLIGHTS

பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு நலத்திட்டம்
X

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 402 பணியாளர்களுக்கு ரூ.145.57 கோடி மதிப்பீட்டில் பணப்பலன்களை வழங்கினார் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 402 பணியாளர்களுக்கு ரூ.145.57 கோடி மதிப்பீட்டில் பணப்பலன்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக, மதுரை மண்டலம் புதூர் கிளை அலுவலகத்தில் நேற்று (30.05.2023) நடைபெற்ற விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, புதூர் பேருந்து பணிமனையில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு குளிருட்டப்பட்ட ஓய்வறையை தொடங்கி வைத்து, மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்களையும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

பின்னர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் வேலைக்குச் செல்லும் மகளிர் என, பெரும்பான்மையான பொதுமக்கள் அரசு போக்குவரத்தையே அதிக அளவில் பயன்படுத்து கின்றனர்.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை லாப நோக்கோடு அல்லாமல் சேவை நோக்கோடு செயல்படுத்தி வருகிறது.

கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபொழுது, கிராம புறங்களின் வளர்ச்சியே பொருளாதார முன்னேற்றத்தை வழிவகுக்கும் என கருதி தமிழ்நாட்டில் இயங்கிய தனியார் பேருந்துகளை பொதுமக்களின் நலன் கருதி அரசுடமையாக்கி பாண்டியன் போக்குவரத்துக் கழகம் என பெயர் சூட்டி 17.01.1972-ல் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகம் தலைமை அலுவலகம் 24.04.1975 அன்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தொழிலாளர் பங்களிப்புடன் பாண்டியன் போக்குவரத்துக் கழக புதுப்பிக்கும் பிரிவு பசுமலையில் துவங்கப்பட்டது. இதன் மூலம் பேருந்துகளின் கூண்டு கட்டும் பிரிவு, டயர் புதுப்பிக்கும் பிரிவு, உதிரிபாகங்கள் புதுப்பித்து பேருந்துகள் நல்ல முறையில் பராமரித்து இயக்க உறுதுனையாக தற்போது வரை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

தொழிற்சாலை பெருக்கம்,வணிகம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகளை விரைந்து பெறுவதற்கு போக்குவரத்து சிறப்பாக இருப்பது முக்கியம். இதை கருத்தில் கொண்டு. கிராமப்புறங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை கருணாநிதியால் 1976-க்கு முன்பே திட்டம் தீட்டி அதில் வேகமான வளர்ச்சி கண்டது என்பதை அனைவரும் அறிவர். 1996 - 2001 டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நான்கரை ஆண்டுகளில் மட்டும் 9477 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு. 1468 புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கிராமப்புற மக்கள் வேலைக்குச் சென்றுவர வசதியாக மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு மினி பஸ்கள் இயக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட். மதுரை மாநகரை தலைமையிடமாகக் கொண்டு கூட்டாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதன் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் 40 பணிமனைகளை உள்ளடக்கி மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இதில், நகர் 1270 புறநகர் 832 மற்றும் மலைப்பகுதிகளில் 64 பேருந்துகளும் இயக்கி வருகின்றன. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டு வருகிறது. இதில் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் 2166 பேருந்துகளும் உபரி பேருந்துகள் 133 பேருந்துகள் மொத்தம் 2299 பேருந்துகள் மூலம் நாள் ஒன்றிற்கு 9.74 இலட்சம் கி.மீ. இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 15.22 இலட்சம் பயணிகள் பயணம் செய்து பயணடைந்து வருகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் தளபதியார் அறிவித்த சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி அனைத்து மகளிர், திருநங்கை, மாற்றுத்திறத்திறனாளிகள் மற்றும் அவருடைய உதவியாளர் பயன்படும் வகையில் இப்போக்குவரத்துக் கழகம் மூலம் மதுரை மண்டலத்தில் சுமார் 890 நகரப் பேருந்துகள் இயக்கிட ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது.

மேலும் ,இதுவரை இத்திட்டத்தினால் ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2023 வரை சுமார் 33.38 கோடி மகளிர் பயணம் செய்து பயணடைந்துள்ளார்கள்.தமிழக முதலமைச்சர் தளபதியார் மே 2021 ஆட்சி பொறுப்பேற்றவுடன் மதுரை கோட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரை பணபலன்கள் முதற்கட்டமாக 269 பணியாளர்களுக்கு 56.81 கோடியும் மே 2021ல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடந்து ,மே 2020 முதல் மார்ச் 2021 வரை 139 பணியாளர்களுக்கு 22.70 கோடியும், ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை 207 பணியாளர்களுக்கு 43.35 கோடியும் ஏற்கனவே வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெறம் விழாவில் 30.05.2023 ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை ஓய்வு பெற்ற 402 பணியாளர்களுக்கு ரூ.145.57 கோடி வழங்கப்படுகிறது.

மேலும் ,மதுரை பசுமலை பயிற்சி மையத்தில் ஓட்டுநர் திறன்மேம்பாட்டு சாதனம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுநர் கல்வி மற்றும் ஓட்டுநர் திறன் மேம்பட்டு விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் ,போக்குவரத்து தொழிலாளர் நலன்கருதி அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனை ஓய்வறையில் குளிர்சாதண வசதி செய்யப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் முதன்முறையாக புதூர் கிளையில் தொழிலாளர் ஓய்வறையில் குளிர்சாதண வசதி துவக்கி வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அனைத்து பணிமனைகளிலும் செயல்படுத்தப் படும். மேலும், விபத்தில்லாமல் பணியாற்றிய 16 ஓட்டுநர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 10 மற்றும் 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு முதல் மூன்று மாணவர்கள் வீதம் 90 மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நன்னடத்தையை பாராட்டும் விதமாக 4 நபர்களை கௌரவித்து பரிசு வழங்கப்படுகிறது.

பொது மக்கள் மற்றும் தொழிலாளர் நலன் கருதி மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு 220 பேருந்துகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை கோட்டத்திற்கு நிறுவனத்தின் மூலம் ஜெர்மன் நிதி உதவியுடன் 251 மாசில்லா பேருந்துகளும் 100 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகம் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று போக்குவரத்துக் கழகங்கள் வளர்ச்சியடைய வழிவகுக்கும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

இவ்விழாவில் ,மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...