/* */

மதுரை அருகே அரசுப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு போட்டி

மதுரை அருகே பாரம்பரிய விளையாட்டு போட்டி அரசு பள்ளியில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை அருகே அரசுப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு போட்டி
X

அரசு பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டி.

டர்னிங் பாயிண்ட் தொண்டு நிறுவனம் சார்பாக ,மதுரை கிழக்கு யா.ஒத்தகடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார் .

தலைமை ஆசிரியர் ஜீவ முன்னிலை வகித்தார். டர்னிங் பாயிண்ட் டிரஸ்ட் நிறுவனர் ஹன்சி சுகன்யா பாரம்பரிய விளையாட்டுகள் அவற்றின் பயன்கள் குறித்து விளக்கம் கூறினார் . மதுரை கிழக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி சிறப்புரை ஆற்றினார் .

தொடர்ந்து, குழந்தைகள் பாரம்பரிய போட்டிகளில் சிறப்பாக கலந்து கொண்டனர். தன்னார்வலர் ஜோயல் ரோஷினி டைனி, பிரின்ஸி மனோஜ், மணிகண்டன் ஆகியோர் போட்டியை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தனர் .

இதில் ,பச்சக் குதிரை, கொல, கொலையா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி ஊற்றி ,பாண்டி விளையாட்டு தட்டங்கள் மற்றும் அனிகாவையும் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன .

இதில் ,மாணவர்கள் மிக உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் . ஆசீர் மாலா மோசஸ், சாந்தா மெர்சி ஹேமா, சிலம்பம் ஆசிரியர் பாண்டி சமூக ஆர்வலர் பிரபு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 26 July 2022 10:58 AM GMT

Related News