/* */

மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கழிவு நீரினை குடியிருப்பு பகுகளில் காலியாக உள்ள இடங்களில் சேகரித்து சுத்திகரிக்கப்பட்ட நீராக ஊருணிகளில் சேமிக்க வேண்டும்

HIGHLIGHTS

மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
X

மதுரை மாவட்டம்,உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டம்

கிராம சபை கூட்டம்

மதுரை மாவட்டம்,உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலாத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் , ஆலாத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில்: வருடந்தோறும் நவம்பர் 22-ஆம் நாளினை உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறோம். அதனடிப்படையில், இன்றைய தினம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், ஆலாத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிராம சபை கூட்டத்தில், கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

குறைகள் குறைவாக இருக்கின்ற ஊராட்சியாக ஆலாத்தூர் ஊராட்சி திகழ்கிறது. எந்த ஊராட்சிக்கு சென்றாலும் பல்வேறு வகையான குறைகளை மக்கள் கோரிக்கையாக வைப்பார்கள். ஆலாத்தூர் ஊராட்சியில் தனிநபர் பிரச்னைகள் உள்ளது என்றும், பொதுப்பிரச்னைகள் ஏற்படாது என்றும் மக்களின் குறைகளை கேட்டறிந்ததன் அடிப்படையில் தெரிய வருகிறது.

ஆலாத்தூர் ஊராட்சியானது நகராட்சிக்கு, மாநகராட்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், ஊராட்சியாக இருந்தாலும் நகராட்சி மாநகராட்சிகளில் உள்ள பிரச்னைகள் போன்று அதிகமான பிரச்னைகளுக்கு உள்ளாகின்றன. மக்களுக்கு அடிப்படைப் தேவைகளில் ஒன்று தண்ணீர் ஆகும். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிதண்ணீர் வசதியை கொண்டு போய் சேர்த்திருப்பது மிகப்பெரும் சாதனையாக கருதுகிறேன்.

அதனடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதே அரசாங்கத்தின் நிர்வாகத்தின் முக்கியமான பொறுப்பாகும். குடிநீரை மக்கள் வீட்டு உபயோகத்திற்கு பிடிக்கும் போது தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீணாகும் தண்ணீரினை தங்கள் குடியிருப்புகளில் காலியாக இருக்கும் இடத்தில் சேகரிக்க வேண்டும். வீணாகும் தண்ணீரானது மாசுடன் கழிவுநீராக ஊருணிகளில் நேரடியாக சென்று சேருவதால் ஊருணிகள் மாசுப்பட்டு உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

தண்ணீர் வீணாவதற்கு நாம் அனைவருக்குமே பொறுப்பு உண்டு. எனவே, கழிவு நீரினை தங்கள் குடியிருப்பு பகுகளில் காலியாக உள்ள இடங்களில் சேகரித்து சுத்தகரிக்கப்பட்ட நீராக ஊருணிகளில் கொண்டு போய் சேர்ப்பது நாம் அனைவரின் கடமையாகும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம் ஆலாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரன்யா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 March 2023 1:00 PM GMT

Related News