/* */

மதுரையில் இம் மாதம் 22-ல் மினி மாரத்தான் போட்டி:

மதுரையில் மாபெரும் மினிமாரத்தான் போட்டி வருகின்ற 22.05.2022 அன்று திருமோகூர் சாலையில் உள்ள காளிகாப்பான் சந்திப்பில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மதுரையில் இம் மாதம் 22-ல் மினி மாரத்தான் போட்டி:
X

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல்நிலையம் சார்பாக, போக்குவரத்து விழிப்புணர்வு சம்மந்தமாக 10 ஆயிரம் நபர்கள் பங்குபெரும் மாபெரும் மினிமாரத்தான் போட்டி வருகின்ற 22.05.2022-அன்று காலை 06.00 மணிக்கு திருமோகூர் சாலையில், உள்ள காளிகாப்பான் சந்திப்பில் நடைபெற உள்ளது.

இந்த மினிமாராத்தான் போட்டியில், கலந்துகொள்ள விருப்பமுள்ள 14 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தங்களது பெயர்களை, இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொண்டு, போட்டி நடைபெறும் நாளில் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மினிமாரத்தான் போட்டியில், பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு கீழ்க்கண்டவாறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்படுகிறது

முதல் பரிசாக ரூ.20000 (1 ஆண் 1 பெண்)

இரண்டாவது பரிசு ரூ.10000 (1 ஆண் 1 பெண்)

மூன்றாவது பரிசு ரூ.5000 (1 ஆண் 1 பெண்)

4 முதல் 13 (10 நபர்களுக்கு) ரூ.1000

14 முதல் 63 (50 நபர்களுக்கு) ஆண்களுக்கு டி.சர்ட் மற்றும் மெடல், பெண்களுக்கு சேலை மற்றும் மெடல்

மேலும், இப்போட்டியில் கலந்து கொள்ளுபவர்களில் லக்கி வின்னர் ஒருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிள்ள சைக்கிள், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.

Updated On: 16 May 2022 4:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!