/* */

மதுரையில் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகம்: மேயர் வழங்கல்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது

HIGHLIGHTS

மதுரையில் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகம்: மேயர் வழங்கல்
X

மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்:

மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்:

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.24 பீ.பீ.குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் ஆகியோர்களுக்கு தாய்சேய் நலம் ஊட்டச்சத்து மற்றும் மருந்து பெட்டகங்களை, மேயர் இந்திராணி பொன்வசந்த், வழங்கினார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில், உள் நோயாளிகள் மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு மருத்துவ சேவை, தாய்சேய் நலம், தொற்று நோய் தடுப்பு பணி, மக்களை தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம்,கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண் 24 பீ.பீ.குளம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மூலம் இப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் சுமார் 55000 பொதுமக்கள் பயன்பெறுகின்றனர். இம்மருத்துவமனையில் ஆண்டிற்கு சுமார் 760 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. 30 வருடங்களாக செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில் மகப்பேறு பிரசவ வார்டு அறை வசதி இதுவரை இல்லாமல் இருந்தது. தற்போது, மேயர், உத்தரவின் படி ஒரு பிரசவ வார்டு அறை நிறுவப்பட்டு மகப்பேறு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு பணியாற்றும் நகர் நல செவிலியர்களுக்கு மகப்பேறு மற்றும் தாய்சேய் நலம் தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீ.பீ.குளம் பகுதியில் வசிக்கும் மோகனபிரியா என்ற கர்ப்பிணி பெண் கடந்த ஆகஸ்ட் 2022 ம் வருடம் மருத்துவமனையில் பதிவு செய்து அன்று முதல் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை எடுத்து வருகிறார். கடந்த 17.03.2023 அன்று மாலை 5 மணிக்கு மேற்கண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர் மூலம் கர்ப்பிணி தாய்க்கு பிரசவம் பார்க்கப்பட்டு சுமார் 6 மணியளவில் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் மூலம் 2.4 எடை கொண்ட பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

மேயர் , பீ.பீ.குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பிரசவ சிகிச்சை அளித்த மருத்துவர்களை சந்தித்து பாராட்டியும், குழந்தை பெற்றுள்ள தாய் மற்றும் சேயை நலம் விசாரித்து அவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தாய் சேய் நல பெட்டகத்தை வழங்கி தாய் மற்றும் சேயினை தொடர்ந்து கண்காணித்து வருமாறு சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அறிவுறுத்தினார்.

மேலும் ,அம்மருத்துவ மனையில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு முத்துலெட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்த நபர்களுக்கு மருந்து பெட்டகங்களையும்வழங்கினார்.

இந்நிகழ்வில், மண்டலத்தலைவர் சரவணபுவனேஸ்வரி, சுகாதாரக் குழுத்தலைவர் ஜெயராஜ்,நகர் நல அலுவலர் மரு.வினோத்குமார் உதவி ஆணையாளர் வரலெட்சுமி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர் நல அலுவலர் மரு.ஸ்ரீ.கோதை,மண்டல மருத்துவ அலுவலர் மரு.ஜீனத், மருத்துவ அலுவலர் மரு.ஐஸ்வர்யா ராஜலெட்சுமி,சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் ,முரளி கணேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2023 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!