/* */

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை

நிலுவையில் உள்ள வழக்குகளை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை எஸ்பி தெரிவித்தார்

HIGHLIGHTS

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
X

மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன்

மதுரை மாவட்டததில், தாக்கலாகும் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதிமன்ற விசாரணையில் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.பாஸ்கரன் உத்தரவின் பேரில், வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை மேற்கொணடு, குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ,ஒவ்வொரு காவல் நிலையத்திலும், உள்ள காவலர்களுக்குபுலன் விசாரணை மேற்கொள்ளுதல், வழக்கு நாட்குறிப்பு எழுதுதல், போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புலன்விசாரணை அதிகாரிகளுக்கு உதவும் பொருட்டு வழக்கு நாட்குறிப்பு தயார் செய்யும் குழு அமைக்கபப்பட்டது. இந்நிலையில், மதுரை மாவட்டம, குற்றவியல் நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தின் மூலம், அதிகப்படியான வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில்-மதுரை மாவட்ட காவல் நிலையங்களில், நிலுவையில் இருந்த வழக்குகளில் மக்கள் நீதிமன்றத்தில் முடிக்க தகுதி வாய்ந்த வழக்குகள் அடையாளம் காணபப்பட்டது.

அவ்வாறு, அடையாளம் காணப்பட்ட 158 வழக்குகள், 1320 மதுபான குற்ற வழக்குகள், 340 வாகன விபத்து வழக்குகள், 36 மோட்டார் வாகன சட்டத்தின் படியான வழக்குகள் மற்றும் 365சிறப்பு சட்டத்தின் படியான வழக்குகள் என மொத்தம் சுமார் 2219வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்குகளில், சம்மந்தப் ப ட்டவர்களிடமிருந்து ரூ. 24,23,900 அபராதம் வசூலிக்கபப்ட்டு, மேற்படி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக மதுரை மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது

Updated On: 14 Sep 2021 9:12 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை