மதுரை மாநகரில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: ஆணையர் தொடங்கி வைத்தார்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 331 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை மாநகரில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: ஆணையர் தொடங்கி வைத்தார்
X

மதுரை மாநகராட்சி நரிமேடு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ப. கார்த்திகேயன்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை, ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி கொரோனா மூன்றாம் அலையை தடுத்திடும் வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 12.09.2021 மற்றும் 19.9.2021 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, மூன்றாம் கட்டமாக தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ளநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வாக்குசாவடி மையங்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 331 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நரிமேடு ஜோதி மேல்நிலைப்பள்ளி, நரிமேடு சித்தா மருந்தகம், பாலரெங்காபுரம், சுந்தரராஜபுரம், திடீர் நகர், பைக்காரா ஆகிய பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதற்காக நியமிக்கப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இம் முகாமில், மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளும், தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் என, சுமார் 1200 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு சுமார் 60,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு அலுவலர்கள், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Sep 2021 2:19 PM GMT

Related News

Latest News

 1. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 2. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
 4. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஆட்சியர்...
 5. பெரம்பலூர்
  24 மணி நேரம் தொடர் மின்சாரம் வழங்க முடியாது- தொழிற்சங்க தலைவர் பேட்டி
 6. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 7. குமாரபாளையம்
  குமாரபாளையம் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: டிஎஸ்பி., ஆய்வு
 8. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் 43,390 நபர்களுக்கு 6-ம்கட்ட கொரோனா தடுப்பூசி
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
 10. பாளையங்கோட்டை
  பாலியல் வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை: நெல்லை நீதிமன்றம்...