/* */

நீட் மற்றும் 7 தமிழர் விடுதலையில் முதல்வர் வெற்றியுடன் திரும்புவார்: செல்லூர் ராஜு

நீட் மற்றும் 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என நம்புவதாக செல்லூர் ராஜு பேட்டி

HIGHLIGHTS

நீட் மற்றும் 7 தமிழர் விடுதலையில் முதல்வர் வெற்றியுடன் திரும்புவார்: செல்லூர் ராஜு
X

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க  முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் கோரிக்கை மனு அளித்தார்

மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் தனது கட்சியினருடன் வந்து கோரிக்கை மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது ,

மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆணையரிடம் மனு அளித்து இருக்கின்றேன். மேலும் பணி முடிக்கப்பட்ட திட்டங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைத்திருக்கிறோம். தொற்றை திமுக கட்டுப்படுத்தவில்லை, இந்திய அளவில் தொற்று இரண்டாவது அலை வேகத்தை குறைத்து உள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்த போது டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக பேசியவர் , தற்போது ஆதரவாக பேசுகின்றார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என கூறினர் அதனை தற்போது அவர்கள் செய்வார்களா என மக்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்

கூட்டுறவுத் துறை தொடர்பாக நேருக்கு நேர் அமர்ந்து விவாதிக்க நான் தயார் ஐ.பெரியசாமி தயாரா என கேள்வி எழுப்பினார்

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம் என்று திமுக பெருமை பேசி வருகின்றனர். இறப்பு மகாராஷ்ட்ரா விட தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. அதிமுக போல திமுக செயல்படவில்லை என்று கூறினார்

நீட் தேர்வை ரத்து செய்து 7 தமிழர் விடுதலையை உறுதி செய்து வெற்றி உடன் திரும்பி வருவார் என்று நம்புவதாக கூறினார்

சசிகலாவை பற்றி கேட்ட கேள்விக்கு தமிழகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை பேசுங்கள் என்று கூறினார்.

Updated On: 17 Jun 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  3. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  7. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  8. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  9. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  10. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...