மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு

மதுரை செனாய்நகரில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு
X

மதுரையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்:

கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் வகையில், தமிழக அரசு சார்பில், கடந்த 12.09.2021 அன்று தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், சுமார் 28 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் முறையாக இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

அதன்படி, மதுரை மாநகராட்சி செனாய்நகர் சுப்பராயலு நினைவு நடுநிலைப்பள்ளியில், மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இதனை, மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்தி கேயன் முன்னிலையில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், நகர்நல அலுவலர் ராஜா, உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 253 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இப்பணியில், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார் 1200 நபர்கள், ஈடுபடுத்தப்பட்டு சுமார் 50,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Sep 2021 10:35 AM GMT

Related News