/* */

ஊடகங்கள், பத்திரிகைகள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட ணும்:மதுரையில் இபிஎஸ்பேட்டி

tn opposition leader,Eps interview at madurai தமிழக சட்டசபை எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பரபரப்பான பேட்டியளித்தார்.

HIGHLIGHTS

ஊடகங்கள், பத்திரிகைகள் நடுநிலையோடு  செய்திகளை வெளியிட ணும்:மதுரையில் இபிஎஸ்பேட்டி
X

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)

tn opposition leader,Eps interview at madurai

மதுரை விமானநிலையத்தில் தமிழக சட்டசபை எதிர்கக்ட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறும்போது, தமிழகத்தில் 12 மணிநேர வேலை மசோதாவை இந்த அரசு சட்டசபையி்ல் தாக்கல் செய்துள்ளது. 8மணிநேர வேலை, 8மணிநேர ஓய்வு, 8மணி நேர உறக்கம் என்பதுதான் சரி. மனிதர்கள் என்ன இயந்திரமா? அவர்கள் ஒன்று மெஷின்கள் அல்ல. அவர்களால் எப்படி தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்யவேண்டும். இதனால் பல லட்ச தொழிலாளர்கள் பாதிப்படைவர். இந்த மசோதாவை இதுவரை எந்தவொரு பிரச்னைகளுக்கும் எதிர்ப்பு குரல் கொடுக்காத திமுக கூட்டணி கட்சிகளே கொடுத்துள்ளது மிகவும் ஆச்சர்யத்தினை அளிக்கிறது.

தற்போது தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது இதனை எதிர்த்தார். இவர்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக உள்ள போது ஒரு மாதிரியாகவும்,ஆளும் கட்சியாக வந்தபின்னர் ஒருமாதிரியாகவும் பேசுகின்றனர். அந்த மாற்றம் நன்கு தெரிகிறது. அதேபோல் நான் சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விரிவாக பேசினேன்.

ஒருமாநிலத்தில்வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கான துறை சம்பந்தப்பட்டது. பல விஷயங்களோடு தொடர்புள்ள துறை இது. முக்கிய விஷயங்களை விரிவாக பேசியும் ஊடகங்கள், பத்திரிகைகள் முழு பேச்சையும் பதிவிடவில்லை. இதற்கு உங்களை ஆளும்கட்சியினர் விடுத்த மிரட்டல் காரணமா? என்றும் தெரியவில்லை.

இந்திய நாடு என்பது ஜனநாயக நாடு. இங்கு எதற்கும் எல்லாவற்றுக்கு எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. உங்களை அவர்கள் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே ஊடகங்கள், பத்திரிகைகள் நாட்டுமக்களுக்கான விஷயம் சம்பந்தப்பட்ட செய்திகளை நடுநிலைமையோடு வெளியிடவேண்டும். இதில் ஆளும்கட்சி , எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்க கூடாது. அதேபோல் எதிர்க்கட்சிகளின் பேச்சுகளை நேரலையில் ஒளிபரப்புவது கிடையாது. ஏன்? மக்களின் பிரச்னைகளைத்தானே பேசுகிறோம். இதில் ஏன் பாகுபாடு? என கேட்டார்.

2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் விடியா திமுக அரசு மக்களுக்கான எந்த நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. இதே நேரத்தில் இப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர் . தியாகராஜன் பேசிய ஆடியோவை வெளியிட்டு செய்தியாளர்கள் மத்தியில் காட்டினார். இந்த பேச்சு உண்மையாகவே நிதியமைச்சருடையதுதானா? என்பதை மதுரை மக்களாகிய உங்களுக்கே தெரியும். 30 ஆயிரம் கோடி ஊழல் என்றால் சும்மாவா? இந்த பணத்தை என்ன செய்வது என்றே தெரியாமல் முழிப்பதாக அவர் பேசியுள்ளார். இந்த ஆதாரம் தற்போது வைரலாக அனைத்து சோஷியல் மீடியாக்களிடமும் பரவி வருகிறது.இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடிரூபாய் ஊழல் என்றால் இன்னும்இருக்கப் போகும் 3 ஆண்டுகளில் என்ன நிலை யாகும்? என்பது உங்களுக்கே தெரியும். இந்த விஷயத்தினை நிச்சயமாக கவர்னரிடம் அதிமுக எடுத்துச் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 24 April 2023 4:52 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?