/* */

திருடு போன ரூ. 27 லட்சம் மதிப்புள்ள கைபேசிகள் உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்

மதுரையில் திருட்டு வழிப்பறி வழக்குகளில் மீட்கப்பட்ட 27 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன

HIGHLIGHTS

திருடு போன ரூ. 27 லட்சம் மதிப்புள்ள கைபேசிகள் உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்
X

மதுரையில்  திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட  கைபேசிகளை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார் 

மதுரை நகர் பகுதியில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்ட 27 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்,அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை நகர் பகுதிகளுக்கு உட்பட்ட தெற்கு வாசல் ,திருப்பரங்குன்றம் ,அவனியாபுரம், திடீர் நகர், தல்லாகுளம், செல்லூர், அண்ணா நகர் மற்றும் கூடல்புதூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களை புலன் விசாரணை செய்ய மாநகர காவல் துறை ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், நகர் பகுதியில் மட்டும் காணாமல் போன 27 லட்சம் மதிப்புள்ள 265 செல்போன்கள் மீட்கப்பட்டு, மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று செல்போனின் உரிமையாளர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவிழா காலங்களில் இது போன்ற செல்போன் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என காவல்துறை ஆணையர் நரேந்திர நாயர் தெரிவித்தார். மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் , காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 April 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து