/* */

மதுரை எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு

MGR Bus Stand Madurai -மதுரை எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மதுரை எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு
X

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

MGR Bus Stand Madurai -மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. சென்னையில் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சுமார் ௧௭ ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீபாவளி பண்டிகையின்போது மட்டும் தமிழக அரசு பேருந்துகளில் சுமார் ஆறுலட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ததாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதேபோல, தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பி செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக அதிக அளவில் பஸ்கள் வந்து செல்லும் ஒரு மையமாக மதுரை உள்ளது. அது மட்டும் இன்றி ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் முக்கியமான மையமாகவும் மதுரை உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பியவர்கள் மதுரை பஸ் நிலையத்திற்கு வந்து குவிந்தனர்.

இந்த நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய்தார். குறிப்பாக, முன்பதிவு செய்துள்ள பயணிகளிடம் பேருந்து வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பயணிகளிடையே பேருந்து வசதிகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வின் பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

பயணிகளில் பலர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சிரமம் இன்றி சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாடவிட்டு ஊருக்கு திரும்புகிறோம். ஆனால் தனியார் பஸ்களில் தான் குறிப்பாக ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவர்கள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Oct 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி