/* */

மதுரையில் மே.2 ல் மீனாட்சி திருக்கல்யாணம்: ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறும்

HIGHLIGHTS

மதுரையில்  மே.2 ல் மீனாட்சி திருக்கல்யாணம்: ஏற்பாடுகள் தீவிரம்
X

பைல் படம்

மதுரை என்றாலே கோவில் நகரம் என்பார்கள். அதில் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது .

மதுரையில் மே இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை காலை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தர திருக்கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி, தினசரி மாலை நேரங்களில், சுவாமி அம்பாள் அலங்காரமாகி பக்தருக்கு காட்சி தருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, மே இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாண மும், அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், மதுரை மேலமடை, தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் திருக்கோயிவிலே, மே. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள், திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. அருள்மிகு சித்தி விநாயகர் கோவில், அருள்மிகு வர சக்தி விநாயகர் கோவில், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வர திருக்கோவில், உள்ளிட்ட கோயில்களில் அன்றைய தினம் காலையில் ,மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும்.

இதை அடுத்து கோயில் சார்பாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Updated On: 29 April 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?