/* */

மதுரை மாநகராட்சியில், மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மேயர் ,கமிஷனர் பங்கேற்பு

madurai corporation publicgrievance camp மதுரை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் முகாமானது மேயர் தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

மதுரை மாநகராட்சியில், மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மேயர் ,கமிஷனர் பங்கேற்பு
X

மதுரை மாநகராட்சிபொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்,மேயர் இந்திராணி பொன்வசந்த்தலைமையில் நடைபெற்றது.

madurai corporation publicgrievance camp

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.5 (மேற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் பிரவீன்குமார் , முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில், உள்ள மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி விதிப்பு வேண்டி 22 மனுக்களும் , காலிமனை வரி வேண்டி 3 மனுக்களும், பாதாளச்சாக்கடை வசதி வேண்டி 5 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 5 மனுக்களும், குடிநீர் வசதி வேண்டி 10 மனுக்களும் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 8 மனுக்களும் சாலை வசதி வேண்டி 15 மனுக்களும் தெருவிளக்கு வசதி வேண்டி 4 மனுக்களும் இதர கோரிக்கைகள் தொடர்பாக 3 மனுக்களும் என, மொத்தம் 75 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது.

தொடர்ந்து, மண்டலம் 3 வார்டு எண்.75 வெங்கடஜலபுரம் பகுதி அரிசி ஆலை அருகில் புதிதாக அமைக்கப்படும் பாலத்தின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை சீரமைப்பது குறித்தும் மேயர் ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.இம்முகாமில்,துணை மேயர் .நாகராஜன் மண்டலத் தலைவர்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, கண்காணிப்பு பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் தயாநிதி, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி செயற் பொறியாளர் சேகர் சுகாதார அலுவலர் விஜயகுமார்உதவி பொறியாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2023 5:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்