/* */

மதுரை சித்திரை திருவிழா: முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி

மதுரையின் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை சித்திரை திருவிழா: முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி
X

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்கவுள்ளதை முன்னிட்டு, இன்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாத5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12 ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், மறுநாள் 13 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்குவிஜயமும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இந்தாண்டு தமிழ் புத்தாண்டு ஆன ஏப்ரல் 14 ஆம் தேதி அன்றைக்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, ஏப்ரல் 15-ம் தேதி தேரோட்டம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து, சித்திரை திருவிழாவை வரவேற்கும் வண்ணம் கோவில் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

இந்தநிலையில், சித்திரை திருவிழா வருவதை தெரிவிக்கும் வண்ணம் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை, காளைகள் முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் முகூர்த்தகால் நடப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக கோவிலில் உள்ள திருவிழாவாக நடைபெற்ற நிலையில் இந்தாண்டு பக்தர்கள் அனுமதியுடன் விமரிசையாக நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. சித்திரை திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Updated On: 5 March 2022 6:42 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...