/* */

மதுரை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மதுபானக்கடைகள், பார் அடைப்பு: மாவட்ட ஆட்சியர்

விடுமுறை நாள்களில், மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மதுபானக்கடைகள், பார் அடைப்பு: மாவட்ட ஆட்சியர்
X

மருது பாண்டியர் நினைவு நாள் விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையினையொட்டிமதுரை மாவட்டத்தில் 27.10.2021 முதல் 30.10.2021 வரையிலான 4 நாட்களுக்கு மதுபானக்கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், 27.10.2021-அன்று நடைபெற உள்ள மருது பாண்டியர் நினைவு நாள் விழாவும், மற்றும் 30.10.2021-அன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின்ஜெயந்தி மற்றும் குருபூஜையும் நடைபெற உள்ளதால், 27.10.2021 முதல் 30.10.2021 வரையிலான 4 நாட்களுக்கு மதுபானக்கடைகள் அடைக்கப்படுகிறது.

27.10.2021-அன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் 30.10.2021-அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினம் ஆகியவற்றை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு, மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழகம் மூலம் நடத்தப்படும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் , அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகம், தேசிய மாணவர் படை அங்காடி கேண்டீன்) படை வீரர் கேண்டீன், ஆகியவை 27.10.2021 முதல் 30.10.2021 வரையிலான நான்கு நாட்கள் மூடப்பட்டு இருக்கும்.

மேற்படி நாள்களில், மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேற்படி, நாள்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என மாவட்ட ஆட்சித்தலைவர்.எஸ்.அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.

Updated On: 25 Oct 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?