/* */

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை விற்பனையா ? 3 பேர் மீது விசாரணை

குழந்தையைப் பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது

HIGHLIGHTS

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த   குழந்தை விற்பனையா ?   3 பேர் மீது விசாரணை
X

பைல் படம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை விற்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையத்தில் சந்தேகப்படும்படியாக வயதான பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அப்பகுதியில் ரோந்து சென்ற காவல் ஆய்வாளர் முத்துமாரிக்கு. அந்த பெண்மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்தப்பெண்ணிடம் விசாரித்தபோது அவர் வைத்திருந்தது பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தை என்று தெரிய வந்தது.அந்த குழந்தை யாருடையது என்று மேலும் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் கூறிய நிலையில், அவரது மகளை அழைத்து விசாரணை நடத்திய போது, அந்தப் பெண் கூறியது பொய் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்தப் பெண்ணை மருத்துவமனை போலீசிடம் ஒப்படைத்தார். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் உசிலம்பட்டி, காக்காரம்பட்டி ஒத்தவீடு நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள்(60,) கருப்பசாமி மனைவி பாண்டியம்மாள்(40,) இரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள், குழந்தையின் தாய் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிடிபட்ட பாண்டியம்மாள்(60,). அழகுபாண்டியம்மாள்(40,) மற்றொரு பாண்டியம்மாள்(40,) ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாலதி மற்றும் குழந்தையின் தாயை போலீசார் தேடி வருகின்றனர

மேலும் கடந்த சில நாட்களில் அரசு மருத்துவமனை அல்லாமல் வேறு ஏதும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்துள் ளதா, அதன் நிலை என்ன என்பது குறித்தும், விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையைப் பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகத்துடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை யாருடைய குழந்தை என்பது குறித்தான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Updated On: 29 March 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!