/* */

மதுரை சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

மதுரையில் உள்ள பல கோயில்களில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
X

மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலய விநாயகர் புறப்பாடு.

மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

மதுரை அண்ணாநகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதியில் வந்தது. அப்போது பக்தர்கள், விநாயகருக்கு தேங்காய், பழம், நெய்வேத்யம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, சித்தி விநாயகர் ஆலய ஆன்மீக பக்தர் குழு செய்திருந்தது. இதே போல, மதுரையில் உள்ள பல கோயில்களில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா:

சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, மூன்று நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது .முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர் அன்று மாலை உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது .

இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் செயலாளர் சுவாமி பரமானந்த சுவாமி பக்தி சொற்பொழிவாற்றினார் .இரண்டாம் நாள் விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் கோமாதா பூஜை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. இவ்விழாவினை ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேனூர் வி.டி பாலு, திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மூன்றாம் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இந்து முன்னணி புறநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் ரமேஷ், ஒன்றியத் தலைவர் முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர் ராஜா நிர்வாகிகள் தனசேகரன், பொன்னையா, சுரேஷ்குமார் ,பாபு, காசி, சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இதில், தேனூர் வார்டு கவுன்சிலர்கள் சவுத்ரி நல்ல மணி, திருவேடகம் கவுன்சிலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் ஊர்வலம் கிராமத்தில் வலம் வந்தது வழிநெடுக விநாயகருக்கு அபிஷேகம் செய்து விநாயகரை வணங்கினர். விழா ஏற்பாடுகளை, பச்சமுத்து பாலகிருஷ்ணாபுரம் இந்து முன்னணி மற்றும் விநாயகர் கமிட்டி குழுவினர் செய்திருந்தனர். சமயநல்லூர் ஏட்டு சிவபாலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

Updated On: 20 Sep 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்