/* */

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் காவல்நிலையத்தில் புகார்

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின், கண்ணியத்தை கெடுக்கும் வகையில் பாடல் பாடப்பட்டதாக புகார் அளித்தனர்

HIGHLIGHTS

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் காவல்நிலையத்தில்  புகார்
X

அதிமுக நிர்வாகிகள் மீது  மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த  திமுக வழக்கறிஞர்கள் அணியினர்

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு குறித்து எடப்பாடி பழனிசாமி, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு மீது திமுக வழக்கறிஞர் அணியினர் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்:

மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில், திமுக வழக்கறிஞர் அணியினர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில், கலை நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் பாடல் பாடும் போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின், கண்ணியத்தை கெடுக்கும் வகையிலும்,அவப்பெயர் உருவாக்கும் வகையிலும் மிகவும் தரம் தாழ்ந்த முறையில் பாடல் பாடி கனிமொழியின் பெயருக்கு, களங்கம் ஏற்படும் வகையில் பொது மேடையில் பலரின் முன்னிலையில் பாட்டு பாடி உள்ளார்.

இந்த செயலினை மாநாட்டின் விழா ஏற்பாட்டாளர்கள் அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஆர்பி.உதயகுமார்,ராஜன் செல்லப்பா,செல்லூர் ராஜு இந்த செயலை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர்.இந்த செயலினால் கழகத் துணை பொதுச் செயலாளர் கனிமொழிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

எனவும், பொதுவெளியில் ஒரு மாநாட்டு மேடையில் பெண்ணை களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பாடல் வரிகளை பலரின் முன்னிலையில் பாடியுள்ளார்கள்.கூட்டு சதி செய்து அவதூறு பரப்பத் தூண்டி பொதுமேடையில் பாடவைத்த அதிமுகவைசேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஆர்பி.உதயகுமார்,ராஜன் செல்லப்பா,செல்லூர் ராஜு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக வழக்கறிஞர் அணியினர் இளமகிழன் தலைமையிலான திமுகவினர் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதேபோல், திமுக மகளிர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Aug 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்