/* */

கொரோனா நோய்தடுப்பு பணி: மதுரையில் இன்று நேர்காணலில் பங்கேற்க தயாரா?

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா நோய்தடுப்பு பணி: மதுரையில் இன்று நேர்காணலில் பங்கேற்க தயாரா?
X

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவித்துள்ளார்.

அதன்படி, மூன்றாம் அலை கொரோனா நோய் தொற்றும் தடுப்பு பணிகளுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மட்டும் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர், துப்புரவு பணியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு, தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணி புரியலாம்.

இதில் விருப்பம் உள்ள, தகுதியான நபர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அலுவலகத்தில் இன்று (7ம் தேதி) வெள்ளிக்கிழமை, தங்களுடைய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதில், இரண்டாவது அலை பாதிப்பு காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் கொரோனா தாக்கம் அதிகமாகும் நிலையில், ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Updated On: 7 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி