கண்மாயிக்கு குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கண்மாயிக்கு குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

 அகிலேஸ்வரன் 

மதுரை நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த லிங்க்கப்பன். இவரது மகன் அகிலேஸ்வரன் என்கின்ற அகிலேஷ் வயது 10 .இவர், தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். மதுரை அருகே, ஆஸ்டின்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், அமைந்துள்ள கூத்தியார்குண்டு கண்மாயில், அகிலேஷ் உடன் நான்கு சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளார்கள்.

கோடை விடுமுறை காலம் என்பதால், சிறுவர்கள் நான்கு பேர் இணைந்து கூத்தியார்குண்டு கண்மாயில் குளிக்கச் சென்று உள்ளார்கள். இதில், அகிலேஷ் ஆழமான பகுதிக்கு சென்று நீருக்குள் மூழ்கி உள்ளார். இதைப் பார்த்த, மற்ற சிறுவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். இரவு வரை அவர் வீட்டார்கள், சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காததால், இவர்களுடன் சென்ற சிறுவர்கள் பிடித்து விசாரித்த போது, நாங்கள் கூத்தியார்குண்டு கண்மாயில் குளிக்க சென்றோம். அப்போது ,ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். நீரில் மூழ்கி பார்த்து பயந்து போய் ஓடி வந்துவிட்டோம். இதுகுறித்து, பெற்றோர் ஆஸ்டின்பட்டி போலீசுக்கு புகார் செய்ததை அடுத்து, ஆஸ்டின்பட்டி போலீசார் இன்று காலை மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பின் சிறுவனின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த, ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 May 2022 9:27 AM GMT

Related News