/* */

மத்திய பொது சுகாதார மையத்துக்கான பூமி பூஜை: மேயர் பங்கேற்பு

Bhoomi Puja for Central Public Health Centre

HIGHLIGHTS

மத்திய பொது சுகாதார மையத்துக்கான பூமி பூஜை: மேயர் பங்கேற்பு
X

மத்திய பொது சுகாதார ஆய்வகத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்ற மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்

மதுரை மாநகராட்சி மண்டலம் 3, அன்சாரி நகரில் மத்திய பொது சுகாதார ஆய்வகம் கட்டுவதற்கான பூமி பூஜை, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரப்பிரிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு புதிய நலவாழ்வு மையங்கள், மருத்துவமனைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்டலம் 3 வார்டு எண்.59 அன்சாரி நகர் 24 மணி நேர மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் சுமார் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் படவுள்ள மத்திய பொது சுகாதார ஆய்வகம்கட்டுவதற்கான பூமி பூஜை, நடைபெற்றது.

இந்நிகழ்வில், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் மனோகரன், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், சுகாதார அலுவலர் வீரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?