/* */

மதுரையில் காந்தி ஜெயந்தி நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரையில் காந்தி ஜெயந்தி நாளில் மாற்றம் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

மதுரையில் காந்தி ஜெயந்தி நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

இன்று அக்டோபர் 2 ம்தேதி காந்தி ஜெயந்தி ஆகும். பாரத நாட்டின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி வெற்றி கண்ட தேச பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகள்.பொது நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


இதனையொட்டி கடைகளில் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களுக்கும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் சிம்மக்கல் நெல் பேட்டை மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்து பொருட்கள் வாங்கிய பொதுமக்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை வாங்கி கொண்டு மக்கும் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.


இந்நிகழ்வில் முத்து பாண்டி, பசும்பொன் முத்து செல்வம், மதன் பாண்டி வெங்கடேஷ் பிரபு, கல்லூரி மாணவர்கள் முகமது இக்பால், விக்கி வினோத், சபி அகமது பரூக் ஆனந்த் அலெக்ஸ் ரூபன் ஸ்டாலின் கோகுல் ரஞ்சித் உள்ளிட்டோருடன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமசும் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் மக்கும் துணி பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காந்தி ஜெயந்தி விழாவை பொதுவான விழாவாக கொண்டாடாமல் மக்காத குப்பை பொருட்களால் நிலம் கெடாமல் இருப்பதற்காக மக்கும் துணிப்பை வழங்கியதோடு, அதற்கான விழிப்பிணர்வினையும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமகக்களிடம் வரவேற்பை பெற்றது.

Updated On: 2 Oct 2022 10:22 AM GMT

Related News