/* */

இடப்பிரச்னையை தீர்க்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

தனது நிலத்தில் விவசாயப்பணி மேற்கொள்ள விடாமல் ஒரு நபர்தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை

HIGHLIGHTS

இடப்பிரச்னையை  தீர்க்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரை மீட்டு அழைத்துச்சென்ற போலீஸார்

இடப் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரை போலீஸார் மீட்டனர்.

மதுரை மாவட்டம், முடுவார்பட்டி சேர்ந்தவர் நாராயணன்(65) . ஒரு கூலித்தொழிலாளியான இவர் தனது விவசாய நிலத்தை ஒருவர் விவசாய பணி மேற்கொள்ள விடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடமும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், மனமுடைந்த முதியவர் நாராயணன் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்துள்ளார் அப்போது தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார் உடனடியாக, அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் முதியவரை தடுத்து அவருக்கு முதலுதவி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணைக்காக முதியவரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கொரோனா தொற்று காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேரடியாக நடத்தப்படுவது இல்லை.இந்த நிலையில் முதியவர் ஒருவர் திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 25 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்