/* */

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவி ஏற்பு

மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி ஏற்பு விழாவில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

HIGHLIGHTS

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை  மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவி ஏற்பு
X



மதுரை 1971 -ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது நகர சபை தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அதன் பிறகு 1978 -ம் ஆண்டில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி பதவி காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2 ஆண்டுக்கு ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் படி 1978 -ம் ஆண்டில் முத்து, 1980 -ம் ஆண்டில் கிருஷ்ணன், 1982 -ம் ஆண்டில் பட்டுராஜன் மேயராக இருந்தனர். இதன் பிறகு மேயர் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆக்கப்பட்டு 1999 -ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடந்தது. மேயரை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அதில் 2001 -ம் ஆண்டில் குழந்தைவேலு, 2006 -ம் ஆண்டில் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்தனர். இதில் தேன்மொழி மேயரானார். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு ராஜன் செல்லப்பா மேயராக இருந்தார். தற்போது மதுரை மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி பதவியேற்றார்.


மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் உள்ள பெரியார் கூட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு ஆணையர் மரு.கார்த்திகேயன் தலைமை வகித்தார். பகல் 12 மணியளவில் இந்திராணி உறுதிமொழியேற்றார். பின்னர், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து, மேயருக்கான வெள்ளிச் செங்கோலை ஆணையர் வழங்கினார்.

முன்னதாக, மேயர் அணியும் கருப்பு அங்கியும், தங்கச் சங்கிலியும் அணிந்து வருகை தந்த இந்திராணிக்கு, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.

இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் .சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் .பூமிநாதன், துணை ஆணையாளர் .சங்கீதா, மக்கள் தொடர்பு அலுவலர்கள் .சாலி தளபதி, .மகேஸ்வரன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலை செல்வம், மாமன்ற செயலாளர் (பொ) .பாலசுப்பிரமணியன், உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...