மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் - மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் - மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
X

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.. திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கீழமாசியில் புறப்பட்ட திருத்தேர் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வர உள்ளது. மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக திருத்தேரில் எழுந்தருளியுள்ளனர். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.


உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் கொரோனா தொற்று தடுப்புக்காக கோவிலின் உள்ளேயே திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்தது.ஆனால், இந்த ஆண்டுக்கான விழாவுக்கு வழக்கம்போல் விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது.

விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

மாலையில் மணமகள் கோலத்தில் மீனாட்சி அம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வந்தனர்.

இந்நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று இறுதி நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கினர்.

2 ஆண்டுகளுக்கு பின் சித்திரை தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.

Updated On: 15 April 2022 2:09 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  கூட்டணியில் யாருக்கு அதிக பாதிப்பு?
 2. டாக்டர் சார்
  Rantac syrup uses in tamil-ராண்டக் சிரப் என்ன பாதிப்பிற்கு
 3. மதுரை மாநகர்
  கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
 4. சினிமா
  சந்திரமுகி 2 படம் சுமாருதான்.. ஆனா பாக்ஸ் ஆபிஸ்.... !
 5. தொழில்நுட்பம்
  Jupiter Planet In Tamil: மிகப்பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்கள்
 6. டாக்டர் சார்
  Bowel movement meaning in tamil-குடல் இயக்கம் என்பது என்ன?
 7. லைஃப்ஸ்டைல்
  painful heart touching quotes in tamil: இதயத்தை தொடும் சில
 8. சினிமா
  வற்றிப் போன வடிவேலு சிந்தனை! முறிந்து போன முருகேசன் காமெடி!
 9. ஈரோடு
  ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி
 10. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்