/* */

மனித உரிமை மீறல்: காவலர்களுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

நான்கு காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மனித உரிமை மீறல்: காவலர்களுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழகத்தில் சில இடங்களில் காவலர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும், சில இடங்களில் காவலர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக பொய்யான புகார்களும் வந்துள்ளன. இதுதொடர்பாக, பல்வேறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் பாபு என்பவர் தனது நண்பர் அசோக்குடன் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்து நிலையம் சென்று உள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் பாலு, போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி பிரவீன் பாபுவை தாக்கினாராம்.

அதனை பிரவீனின் நண்பர் அசோக் தனது செல்போனில் படிம்பிடித்துள்ளார். அதனைக் கண்டதும் ஆத்திரமடைந்த காவலர் பாலு அசோக்கையும் தாக்கினாராம். இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்த சென்ற காவலர் பாலு மேலும் மூன்று காவலர்களுடன் சேர்ந்து இருவரையும் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

காயமடைந்த பிரவீன் பாபு மற்றும் அசோக் ஆகியோர் காயமடைந்த நிலையில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமினில் வெளியில் வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பிரவீன் பாபு மற்றும் அசோக் ஆகியோர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காவலர்கள் மீது புகார் அளித்தனர்.

அந்த வழக்கை விசாரித்த ஆணையம், மனித உரிமைகள் மீறப்பட்டு உள்ளதாகக் கூறி இருவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்து. மேலும், அந்த தொகையை அவர்களை தாக்கிய நான்கு காவலர்களிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டது. மேலும், நான்கு காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.

மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து காவலர் பாலு உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி தாக்குதல் நடத்தியது உறுதிகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், மனித உரிமை மீறலில் காவலர்கள் ஈடுப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால் மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள் காவலர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Updated On: 27 Feb 2023 7:38 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?