/* */

வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்று நடந்தது.

HIGHLIGHTS

வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் நடந்த சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி 7 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் நாராயணா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளமைத் திருமணம், கல்வியின் அவசியம் மற்றும் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது வந்தோர் கல்வி, குட் டச், பேட் டச் மூலம் மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 1098 எண்ணை பயன்படுத்துதல் ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு ஆடல், பாடல், கதைகள் மற்றும் தப்பாட்டம் மூலம் சமுதாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

முதல் நாளான நேற்று சென்னசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பனஹள்ளி மகளிர் மேல்நிலைப்பள்ளி, தீர்த்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட மராணவ, மாணவிகள், 150க்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து