/* */

கிருஷ்ணகிரியில் டிப்பர் லாரி மோதி விபத்து: கட்டிட தொழிலாளர்கள் உடல் நசுங்கி சாவு

கிருஷ்ணகிரியில் இருச்சக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் டிப்பர் லாரி மோதி விபத்து: கட்டிட தொழிலாளர்கள் உடல் நசுங்கி சாவு
X

கட்டிட தொழிலாளர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே ஜெகதாப் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் கட்டிட மேஸ்திரியா வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் இன்று வேலைக்காக இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி வந்துள்ளார். அவருடன் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மேகலா மற்றும் லட்சுமி ஆகிய இரு பெண் தொழிலாளர்களும் உடன் வந்துள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே சிக்னலில் நின்று உள்ளனர். அப்போது திருப்பத்தூரிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி அவர்கள் அருகே சிக்னலில் நின்று உள்ளது.

சிக்னல் முடிந்த நிலையில் டிப்பர் லாரி ஓசூரில் நோக்கி சென்றபோது இடது புறமாக இருந்து சக்திவேல் டிப்பர் லாரி கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியதில் நிலைதடுமாறி சக்திவேல், மேகலா ,லட்சுமி ஆகிய 3 பேரும் கீழே விழுந்தனர்.

இதில் டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கி கட்டிட மேஸ்திரி சக்திவேல் மற்றும் பெண் பணியாளர் மேகலா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக லட்சுமி உயிர் தப்பினர்.

மிகவும் மக்கள் நெருக்கடியும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து அங்கிருந்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலூகா போலீசார் இருவரின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டிப்பர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  3. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  4. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  6. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  10. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய