மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகள், ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி அருகே மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகள் மற்றும் ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகள், ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து சிறப்பு பூஜை
X

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னப்பனமுட்லு கிராமத்தில் கால்நடைகள் மற்றும் ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்ட கிராம மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆண்டுத்தோறும் தைப்பொங்கல் பண்டிகையை அடுத்து வரும் மாட்டுப் பொங்கலன்று உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மற்றும் நமது பாரம்பரிய வீரத்தினை பறை சாற்றும் வகையில் விளங்கும் ஜல்லிகட்டு எருதுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜைகள் செய்து வழிப்படுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் தமிழர்களின் பாரம்பிரிய வழக்கத்தின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பனக முட்லு கிராமத்தில் மாட்டு பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதில் தமிழர் பாரப்பரிய மஞ்சுவிரட்டு சங்கத்தின் மாவட்ட பெருலாளர் அண்ணாமலை லட்சுமி தலமையில் நடைப்பெற்ற இந்த விழாவின்போது விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மற்றும் ஜல்லிகட்டு எருதான சொப்பனசுந்தரி உள்ளிட்ட பல்வேறு எருதுகளை குளிப்பாட்டி , கொம்புகளை சீவி, கொம்புகளுக்கு வர்ணம்பூசி, பூமாலைகள் அணிவித்தும் மாட்டு தொழுவங்களை வண்ண கலர்களால் அலங்காரம் செய்து மாட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடினார்கள்.

அதைத்தொடர்ந்து, கால்நடைகளுக்கு பழ வகைகள், பொங்கல் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு தானியங்களை படையல் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். பின்னர் படையளிட்ட உணவு வகைகளை, கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

இதனைத்தொடர்ந்து எருதுகளை அழைத்து வந்து ஊர் மத்தியில் எருதுகளைக் கொண்டு எருதாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதோ போல பர்கூர், கும்மனூர், ஜெகதேவி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மாட்டுப்பொங்கள் விழா களைக் கட்டியது.

Updated On: 15 Jan 2022 12:22 PM GMT

Related News

Latest News

 1. சிதம்பரம்
  அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
 2. குறிஞ்சிப்பாடி
  குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
 3. கடலூர்
  கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
 4. குளச்சல்
  குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
 5. காஞ்சிபுரம்
  தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
 6. கன்னியாகுமரி
  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...
 7. இராஜபாளையம்
  இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
 8. நாகப்பட்டினம்
  நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
 9. கரூர்
  கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
 10. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா