/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3வது நாளாக தடுப்பூசி போடுவது நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக, மூன்றாவது நாளாக இன்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3வது நாளாக   தடுப்பூசி போடுவது நிறுத்தம்
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த, 5, ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக, 2 லட்சத்து, 35 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுகொண்டனர்.

ஆனால் மருந்துகள் காலியான நிலையில், கடந்த, 3 நாட்களாக மாவட்டம் முழுவதும், தடுப்பூசி போடும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம், 25 முதல், 18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசியும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போடப்பட்டு வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்றும், டோக்கன்கள் வாங்கி வைத்தும் ஊசி போட்டு வந்தனர்.

ஒரேநாளில் அதிகபட்சமாக, 9ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போட்டு வந்த நிலையில், கடந்த, 3 நாட்களாக மாவட்டத்தில் எங்கும் தடுப்பூசிகள் போடாததால், பொதுமக்கள் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று, தடுப்பூசிகள் இல்லை என்ற அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நாளொன்றுக்கு, 4 முதல், 5 பேர் வரை கொரோனா தொற்றால் உயிரிழந்து வரும் நிலையில், தடுப்பூசிகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் கவலையும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தடுப்பூசிகள் விரைவில் வரவிருப்பதால், ஓரிரு நாளில் மீண்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Jun 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்