/* */

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்: அக். 31ம் தேதி வரை காலக்கெடு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணம் செலுத்த காலக்கெடு வருகிற அக்டோபர் 31ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்: அக். 31ம் தேதி வரை காலக்கெடு
X

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த காலக்கெடு வருகிற அக்டோபர் 31ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள், அவர்களின் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட,பயிர் வாரியாக சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சிறப்பு பருவம் அரசாணை பெறப்பட்டுள்ளது. சிறப்பு பருவம் நெல் பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்ட காப்பீட்டுத் கட்டணம் செலுத்த வருகிற அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள், மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை யைமங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலம்.

ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்ச இழப்பீடாக நெற் பயிருக்கு ரூ.34,750.20 வழங்கப்படும். இத்திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் ஏறப்டும் இழப்புகளுக்கும், பிர்கா வாரியாக சோதனை அறுவடை செய்து, இழப்பின் அளவை கணித்து பயிர் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இழப்பின் போது காப்பீட்டுத் தொகை தவறாமல் கிடைக்கும்.

விவசாயிகள் சதங்கள் அருகாமையில் உள்ள மக்கள் கணினி மையங்களை அணுகி நெல் பயிறுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.521.25 என செலுத்தி இத்திட்டத்தில் தங்களது பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண், சிட்டா, அடங்கல, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை மக்கள் கணினி மைத்திற்கு சென்று பதிவேற்றம் செய்து, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெற கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  2. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  3. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  4. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  5. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  6. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  7. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  9. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
  10. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு