/* */

கிருஷ்ணகிரியில் கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கிவைப்பு

கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கிவைப்பு
X

கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார் 

தர்மபுரி மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பது குறித்த மூன்று நாட்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள், 7 தாலுக்கா குக்கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசின் வழிகாட்டி நெறிமுறைகள், சமூக இடைவெளி, தடுப்பூசி, குறித்த தகவல்களை வழங்கும் வகையில் வாகன விழிப்புணர்வு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு நோட்டிஸ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பின்னர் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக் கொண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், மக்கள் தொடர்பு கள அலுவலர் பிபின் எஸ் நாத் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Updated On: 29 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  2. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  3. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  4. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  5. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  6. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  7. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  8. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  9. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்