/* */

கே.பி.முனுசாமியின் பி.ஏ.வுடன் அதிமுக தொண்டர் வாக்குவாதம் : வைரல் ஆகும் ஆடியோ

சசிகலா குறித்து விமர்சித்து பேட்டியளித்ததாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பி.ஏ.வுடன் அதிமுக தொண்டர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ சமூக வளைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

HIGHLIGHTS

கே.பி.முனுசாமியின் பி.ஏ.வுடன் அதிமுக தொண்டர் வாக்குவாதம் :  வைரல் ஆகும் ஆடியோ
X

     எம்.எல். ஏ. கேபிமுனுசாமி

சசிகலா குறித்து விமர்சனம் செய்த கே.பி.முனுசாமியின் பி.ஏ.வுடன் அதிமுக தொண்டர் வாக்குவாதம் செய்த வைரல் ஆகும் ஆடியோவால் பரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா குறித்து விமர்சித்து பேட்டியளித்ததாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ., பி.ஏ.வுடன் அதிமுக தொண்டர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ சமூக வளைத்தளங்களில் வைரல் ஆகியுள்ள சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

அதிமுக தொண்டர் : கே.பி.எம். சாரோட பி.ஏ.வுங்களா?

கே.பி.முனுசாமியின் பி.ஏ : சொல்லுங்க.

அதிமுக தொண்டர் : என்ன சார் கே.பி.எம். ஐயா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். என்ன விசயம் சார். கட்சியை வந்து நாலு, மூணாக்க பார்கிறாங்களோ.

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: எப்படி?

அதிமுக தொண்டர் : இவர் இந்த மாதிரி சொல்வதற்கு காரணம் என்னங்க சார்?

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: இது ஆரம்பத்தில் இருந்து சொல்லினுதான் வந்தது. புதுசா எதுவும் சொல்லலையே.

அதிமுக தொண்டர்: எப்படி, கவுண்டர்களுக்கும், வன்னியர்களுக்கும் உண்டான சாதி கட்சியா மாத்திக்கலாம் என்றா--?

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: இல்லை இல்லை அப்படியெல்லாம் இல்லை.

அதிமுக தொண்டர் : இது அம்மாவின் பொது உடமையான கட்சி. இதில் நீங்க சேர கூடாது, அவங்க சேரகூடாது என யாரும் சொல்லும் அதிகாரத்தை அம்மாவோ, அய்யாவோ கொடுத்துட்டு போகல.

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: இன்னைக்கு என்ன சொன்னாரோ, இதையே தான் ஆரம்பத்தில் இருந்து அவர் சொல்லிட்டு வருகிறார்.

அதிமுக தொண்டர்: ஆரம்பத்தில் இருந்து என்ன சார் சொன்னாங்க. இவங்க கட்சிக்கு வரணும். சசிகலா அம்மா கட்சிக்கு உள்ளே வரகூடாது என சொல்லியிருக்கிறார்.

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: ஆமாம்.

அதிமுக தொண்டர் : எதற்கு?

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: வேண்டாம் என்று அந்த அம்மாவே அறிக்கை கொடுத்துச்சே.

அதிமுக தொண்டர்: இரண்டு மூணு நாளைக்கு முன்னாடி ஆடியோ உட்டதுக்கு அப்புறம் தான் பேட்டி கொடுத்திருக்கிறார்.

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: ஆரம்பத்திலேயே அந்த அம்மா பேட்டி கொடுத்துட்டாங்களே.

அதிமுக தொண்டர்: என்னண்ணு, நான் கட்சிக்கு வரமாட்டேன். கட்சியை செயல்படுத்த மாட்டேன். நான் கட்சியை விட்டு ஒதுங்கி கொள்கிறேன் என சொன்னாங்களா?

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: அவங்களே பேட்டி கொடுத்தாங்களே. எத்தனையோ மீட்டிங், பேட்டியில் அரசியலில் இருந்து நான் ஒதுங்கி கொள்கிறேன் என சொன்னாங்களே.

அதிமுக தொண்டர்: அரசியலில் இருந்து நான் ஒதுங்கிக்கிறேன் என அவங்க சொல்லவில்லையே. அந்த பேட்டியை முழுசா படிச்சு பாருங்க. நான் தற்காலிகத்திற்கு ஒதுங்கிக்கிறேன். கட்சி ஒற்றுமையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தான் சொன்னாங்களே தவிர, கட்சியை நாலு, மூணா கூரு போட்டு விற்க சொல்லலையே.

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: இதில் என்ன இருக்கு கூரு போட்டு விற்க.

அதிமுக தொண்டர்: அதான் வித்துட்டுங்காளே.

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: யாரு வித்துட்டாங்க?

அதிமுக தொண்டர்: அது தான் வித்துட்டாங்களே. இதற்கு கே.பி.எம். சார் தான் முழு காரணம் எல்லாத்துக்கும். தமிழ்நாட்டுக்கு இது எல்லாம் தெரியும். ஏன் இவர் மறுபடியும், மறுபடியும் பேட்டி கொடுக்கணும். ஒவ்வொரு தொண்டனும் கொந்தளிச்சு போய் கிடக்கிறோம் சார்.

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: எந்த தொண்டனும் பேசல. அவங்க அமமுக காரணுங்க.

அதிமுக தொண்டர்: அமமுகவோ, திமுகவோ, பாமகவோ, கொங்குவேளாளர் கட்சியோ பேசல. உண்மையான அதிமுக தொண்டன் பேசுகிறேன். சரிங்கலா?

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: சரிங்க. சரிங்க. நீங்க நாளைக்கு பேப்பரில் விளம்பரம் கொடுங்க.

அதிமுக தொண்டர்: மைக் போட்டு தான் இனி கே.பி.முனுசாமியை பேசணும். அவர் தலைமைக்கு கட்டுப்பட்டு இருக்கிறாரா? எங்க ஒருங்கிணைப்பாளரிடம் பர்மீஷன் வாங்கிட்டு அவர் பேட்டி கொடுத்தாரா?

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: எந்த ஒருங்கிணைப்பாளரு? எல்லாரிடமும் அவர் பேசிட்டு தான் பேட்டி கொடுத்தார்? யாருகிட்ட வாங்கணும்?

அதிமுக தொண்டர்: ஓ அப்ப அவர் தான் கட்சி தலைவரா?

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: மாமுலா நிருபர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர் பதில் சொல்கிறார்.

அதிமுக தொண்டர்: கட்சியின் புரோட்டாகால் என்னன்ணு உங்களுக்கே தெரியல. கட்சியின் தலைமை யாரு? எனக்கு சின்ன வயசு, சின்னபையன். நான் கேட்பது கட்சி தலைவர் யாரு சார்?

சார், சார் இதை கேளுங்க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் 2 பேரு. 4 பேரு தான் ஆரம்பத்தில் இருந்து முடிவு செய்கிறார்கள்.

அதிமுக தொண்டர்: அப்ப அந்த 4 பேரு என்ன முடிவு எடுத்தாலும் பேட்டி கொடுத்துக்கலாமா?

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: அப்படி இல்லைங்க. அவரிடம் பேட்டி கேட்கிறார்கள். அதற்கு அவர் பதில் சொல்கிறார்.

அதிமுக தொண்டர்: அதெல்லாம் இல்லையங்க. அவர் தான் பிரஸ் மீட் வச்சிருக்காரு. நேத்து நைட் 10 மணிக்கு நான் பிரஸ் மீட் கொடுக்கிறேன் என சொல்ராரு. மறாவது நாள் மதியம் பிரஸ் மீட் கொடுத்துள்ளார்.

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: இல்லையே. அப்படியெல்லாம் இல்லை. யார் சொன்னது?

அதிமுக தொண்டர்: அப்ப இந்த நாலு பேரும், நாலு மைக்கை பிடித்து எதுவேணும்முன்னாலும் பேசலாமா?

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: இல்லை, இல்லை, அவரிடம் கேட்டாங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார்.

அதிமுக தொண்டர்: கிடையாதுங்க சார், நீங்களா பிரஸ் மீட் வச்சு, பேட்டி கொடுத்திருக்கிறார். உங்களை யாரோ தூண்டுதல் பண்ணியிருக்காங்க. அது தான் உண்மை.

கே.பி.முனுசாமியின் பி.ஏ.: அதெல்லாம் இல்லை.

அதிமுக தொண்டர்: கட்சியை நீங்க கெடுக்கணுன்னு முடிவு பண்ணிட்டிங்க. அது எந்த லெவலில் போய் முடியுமோ என பார்த்துக்கலாம். சரிங்கலா. இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.

Updated On: 8 Jun 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...