/* */

இளம் சாதனையாளார்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இளம் சாதனையாளார்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இளம் சாதனையாளார்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்.

இளம் சாதனையாளார்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் (PM-YASASVI) தகுதியான மாணவர்கள் 10.08.2023-க்கு விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.

2023-24 நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடிளினர் (OBC, EBC & DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சார்ந்த 3093 மாணவ /மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ /மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ2.50 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் PM.YASASVI நுழைவுத் தேர்வில் (YASASVI Entrance Test) பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். இத்தேர்விற்கு 10.08.2023-க்குள் https://yetnta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

எழுத்து தேர்வு (OMR Based) 29.09.2023 ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார்எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் https://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 July 2023 6:13 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை