/* */

சூளகிரி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சூளகிரி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

முருக்கலப்பள்ளி தென்பெண்ணை ஆற்றின் கிளைக் கால்வாய் குறுக்கே  புதியதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், காமன்தொட்டி மற்றும் சென்னப்பள்ளி ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.2 கோடியே 55 இலட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காமன்தொட்டி ஊராட்சியில், கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் நூலக கட்டிடம் மறுசீரமைப்பு பணிகளையும், அரசு உயர்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.6 இலட்சத்து 46 மதிப்பில் கழிப்பறை கட்டிட பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சென்னப்பள்ளி ஊராட்சியில், முருக்கலப்பள்ளி தென்பெண்ணை ஆற்றின் கிளைக் கால்வாய் குறுக்கே சமூக பொறுப்புணர்வு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 82 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகளையும், பந்தாரகுட்டை கிராமத்தில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.1 இலட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சி குழி அமைக்கப்பட்டுள்ளதையும், சென்னப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கூடுதல் கட்டிட பணிகளையும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னப்பள்ளி ஊராட்சியில், நீர்வளத்துறை சார்பாக சின்னாறு அணையிலிருந்து, வலதுபுற கால்வாய் வழியாக நீர்வரத்து கால்வாயை ரூ.28 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் என மொத்தம் ரூ.2 கோடியே 55 இலட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், சென்னப்பள்ளி ஊராட்சியில், தூய்மை பாரத திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மாது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், பாப்பி பிரான்சினா, உதவி பொறியாளர்கள் சுமதி, வெங்கடேஷ், ஷேமலா, பணி மேற்பார்வையாளர்கள் தனம், காமன்தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 July 2023 5:18 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  2. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  3. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  6. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  7. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  10. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!