/* */

கேரள மக்கள் அச்சப்படவே வேண்டாம்: இடுக்கி, சிறுதோணி, குளமாவு அணைகளை திறங்கள் -விவசாயிகள்

முல்லை பெரியாறு அணையால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே முல்லை பெரியாறு அணையை உடைப்போம் என்ற கோஷத்தை கை விடுங்கள் -விவசாயிகள்

HIGHLIGHTS

கேரள மக்கள் அச்சப்படவே வேண்டாம்: இடுக்கி, சிறுதோணி, குளமாவு அணைகளை திறங்கள் -விவசாயிகள்
X

லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடிய ஐந்து மாவட்ட விவசாயிகள்.

கொட்டும் மழையிலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், கேரள அரசு இடுக்கி, சிறுதோணி, குளமாவு அணைகளை திறக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளனர்.

முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியை எட்டி விட்டது. இதனை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரத்தை சேர்ந்து ஐந்து மாவட்ட விவசாயிகள் கொட்டும் மழையிலும் கொண்டாடி வருகின்றனர். இன்று மாலை பலத்த மழையிலும் லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பொதுமக்கள் அத்தனை பேருக்கும், இனிப்புகளை வழங்கினர். பாதுகாப்பிற்கு நின்றிருந்த தமிழக போலீசார் அத்தனை பேருக்கும் இனிப்புகளை வழங்கினர். கேரளா செல்பவர்களுக்கும், கேரளாவில் இருந்து தமிழகம் திரும்புபவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மழை இனியும் பெய்யும். இன்னும் பல நாட்களுக்கு மழை இருக்கும். முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளா வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியை தாண்டுகிறது. மழை கூட, கூட இந்த நீரின் அளவும் கூடும். எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கேரள மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. காரணம் முல்லை பெரியாறு அணை நீர் செல்லும் வண்டிப்பெரியாறு கேரளாவில் உள்ள குடியிருப்புகளில் இருந்து (சராசரி கடல் மட்டத்தை கணக்கிட்ட விவரம் கேரள அரசிடமும் உள்ளது. தமிழக அரசிடமும் உள்ளது.) 250 அடி ஆழத்தில் தான் செல்கிறது. எனவே கீழ்நோக்கி ஓடும் நதி, மேல்நோக்கி பாய்ந்து கேரள மக்களுக்கு கெடுதல் செய்யாது. எனவே முல்லை பெரியாறு அணையால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே முல்லை பெரியாறு அணையை உடைப்போம் என்ற கோஷத்தை கை விடுங்கள். நாங்கள் உங்களிடம் விரும்பும் நல்ல உறவை, நீங்களும் எங்களுக்கு தாருங்கள். சில ஏமாற்றுப்பேர்வழிகள் கேரள மக்களை பயன்படுத்தி பிழைப்பு நடத்துகின்றனர். அவர்களின் மோசடி வார்த்தைகளை நம்பாதீர்கள்.

அதேபோல் இடுக்கி, சிறுதோணி, குளமாவு அணைகள் நிரம்பி வழிகின்றன. இன்னும் மழை பெய்யும். வெள்ளம் வரும். எனவே இந்த அணைகளை திறந்து நீரை ஓரளவு வெளியேற்றி பாதுகாப்பான நிலையில் வைக்குமாறு உங்களது அரசை (கேரள அரசை) அறிவுறுத்துங்கள். இடுக்கி அணை முல்லை பெரியாறு அணையை விட பலநுாறு மடங்கு பெரியது. அதேபோல் 72 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது. (முல்லை பெரியாறு அணையின் நீர் சேமிப்பு திறன் 5 டி.எம்.சி தான்). இந்த உண்மையை கேரள மக்கள் புரிந்து கொண்டு இந்த குறிப்பிட்ட அணைகளில் இருந்து மழைக்காலத்தின் தன்மைக்கு ஏற்ப நீரை வெளியேற்றி பாதுகாப்பாக வைக்க சொல்லுங்கள். இவ்வாறு கூறினர்.

தேனி மாவட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் மற்றும் தி.மு.க., முக்கிய நிர்வாகிகளும் முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Updated On: 30 Nov 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!