/* */

நாட்டிலேயே முதன் முறையாக கேரள சட்டசபையில் தண்ணீருக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்து அசத்தல்....

kerala assembly, cm water budget filed நீரின்றி அமையாது உலகு. தண்ணீர் தேவையை ஒவ்வொரு நாடும் பூர்த்தி செய்யவேண்டியது அவர்களுடைய தலையாய கடமை. அந்த வகையில் தண்ணீருக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

HIGHLIGHTS

நாட்டிலேயே முதன் முறையாக  கேரள சட்டசபையில் தண்ணீருக்காக  தனி பட்ஜெட் தாக்கல் செய்து அசத்தல்....
X

கேரள சட்டசபைக் கட்டிடத்தின் முகப்பு தோற்றம்  (கோப்பு படம்)

kerala assembly, cm water budget filed

மனிதன் மற்றும் இன்ன பிற ஜீவராசிகள் உயிர் வாழ தண்ணீர் என்பது அவசியம் தேவை. நீரின்றி இந்த உலகமே அமையாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த அளவிற்கு நீர் நம் வாழ்வின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

kerala assembly, cm water budget filed

தண்ணீ்ர் இருந்தால் தான் இன்றைய நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தொழில் அமோகமாக நடக்கும். ஒரு நாடு தன்னிறைவு பெற்ற நாடாக இருக்க வேண்டும் எனில் அந்த நாட்டிலுள்ள மக்களாகிய விவசாயிகள் தங்களுடைய தொழிலுக்கு ஆதாரமான தண்ணீர் தேவையைப் பெற வேண்டும். வானம் பார்த்த பூமியாக இருந்துவிட்டால் அவர்களுக்கு பெருத்த நஷ்டமே. தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் வருடந்தோறும் மிகவும் விருப்பமான விவசாய தொழிலை இன்றளவில் நேர்த்தியாக செய்து வருகின்றனர். அந்த வகையில் விவசாயிதான் இந்த நாட்டின் முதுகெலும்பு. என்னதான் மாநிலங்கள் விவசாயத்திற்காக தனி பட்ஜெட் போடுவது போல தாக்கல் செய்தாலும் இன்றளவில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாமலேயே உள்ளது.

kerala assembly, cm water budget filed


கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நிகழ்ச்சியில் பேசினார் (கோப்பு படம்)

kerala assembly, cm water budget filed

அந்த வகையில் உலகமே இன்று தண்ணீரை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகிறது. ஒரு நாள் தண்ணீர் நமக்கு கிடைக்காவிட்டால் நாம் என்ன பாடுபடுகிறோம். ஆமாங்க இந்த தண்ணீர் இதேபோல் நமக்கு எல்லா காலங்களில் கிடைக்குமா? அதற்கான நீர் ஆதாரம் நம்மிடையே உள்ளதா? என பலரும் கேள்வி கேட்கலாம்.ச ந்தேகத்தினை எழுப்பலாம். ஆனால் இதற்கு விடையும் நம் கையில்தான் உள்ளது. நமக்கு காலம் காலமாக தண்ணீர் கிடைக்கவேண்டும் எனில் நாம் என்ன செய்ய வேண்டும்? நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நம் வாழ்க்கை முறை இருக்கவேண்டும்.

kerala assembly, cm water budget filed


kerala assembly, cm water budget filed

கவலையளிக்கும் கான்கிரிட் ரோடுகள்

தமிழகத்தின் பல மாவட்டங்களிலுள்ள தெருக்கள் அனைத்துமே முன்பு மண்ரோடுகளாக காட்சியளித்தது நவீனம் என்ற பெயரில் கான்கிரீட் ரோடுகளாகவே காட்சியளிக்கிறது. மண்ரோடு மாயமானது. அப்புறம் எப்படிங்க? நிலத்தடி நீர் சரிவர கிடைக்கும். எவ்வளவு மழை பெய்தாலும் கான்கிரீட்டை ஊடுருவி அந்த தண்ணீரானது நிலத்துக்கு போகவே போகாது.அது எங்காவது ஓரிடத்தில் மட்டும் செல்லலாம். ஆனால் அவையனைத்தும் நம் தேவையை எதிர்காலத்தில் நிறைவேற்றுமா?.... ஏங்க ஓசோன் மண்டலத்தினையும் ஓட்டை போட்டுட்டீங்க... கீழேயும் நிலத்தடி நீர் ஆதாரம் போயிடுச்சி... அப்புறம் எப்படிங்க எதிர்காலம் இருக்கும்- நினைத்து பாருங்கள்...

kerala assembly, cm water budget filed


kerala assembly, cm water budget filed

தண்ணீரை சேமியுங்கள்

இன்றளவில் பலஇடங்களில் தண்ணீர் அநாவசியமாக வீணாகிக்கொண்டிருக்கிறது. ரோட்டில் நடந்து செல்வோர் கூட குழாயில் தண்ணீர் வீணாகிப்போனாலும் கண்டு கொள்வதில்லை. அப்புறம் எப்படிங்க எதிர்காலத்தில் நமக்கு தண்ணீர் கிடைக்கும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் எண்ணெய்க்கிணறுகள் அதிகம் உள்ள நாடுகளில் எண்ணெய் விலைகுறைவுங்க...தண்ணீர் விலைதான் அதிகம் அங்கே. அதேபோல் நிலை நம் நாட்டிலும் நிலவாமல் இருக்க நாம்தான் பாதுகாப்பாக தண்ணீரை சேமிக்க வேண்டும். அதுவும்இக்கால இளையோருக்கு இதனை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உணர்த்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத் தண்ணீர் தேவை தன்னிறைவு பெறும்.

kerala assembly, cm water budget filed


kerala assembly, cm water budget filed

கேரளாவில் தண்ணீ்ருக்கு தனி பட்ஜெட் தாக்கல்

உலகநாடுகள் அனைத்துமே வருடந்தோறும் வரவு செலவுக்கான நிதிநிலை அறிக்கை அதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள். தமிழகத்தினைப் பொறுத்தவரை விவசாயத்திற்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அது இல்லாமல் பொதுபட்ஜெட் தனி. மத்தியில் பொது பட்ஜெட், ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஆண்டுதோறும்.

உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் தன நாட்டின் தேவைக்கேற்ப தனித்தனியாக பட்ஜெட் தாக்கல் செய்வது நடைமுறையில் உள்ள வழக்கம்.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உங்களது மாநிலத் தேவைக்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அதனை நடைமுறைப்படுத்தும்.தமிழகத்தில் அது போன்று பட்ஜெட் தாக்கல் செய்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.மேலும் கூடுதலாக விவசாயத்திற்கென்று தனியாக தமிழகம் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது.

kerala assembly, cm water budget filed



kerala assembly, cm water budget filed

கோடைக்காலம் நெருங்கி விட்டதால் இனி தண்ணீர் பற்றாக்குறையானது தலைவிரித்தாடும் சூழ்நிலை ஆங்காங்கே உருவாகும். பருவமழை உரிய காலத்தில் பெய்திருந்தால் இந்த பிரச்னை இல்லை. பெய்யாத பட்சத்தில் அந்த பகுதிகளில் தண்ணீர் பிரச்னைதாங்க..

கேரள சட்டசபையில் தண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தண்ணீருக்கென தனி பட்ஜெட்டினை அம்மாநில முதல்வர் பினராயிவிஜயன் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதியைக் கொண்டு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்க வழி வகை செய்யப்படும் என சொல்லியுள்ளார். இது நாட்டிற்கே முன்னுதாரணமான ஒரு செயலாக திகழ்கிறது. காரணம் விவசாயத்திற்காக தமிழகத்தில் தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் விவசாயத் தொழிலுக்கு அடிப்படைத்தேவையே தண்ணீர்தாங்க... இதற்கு நாமும் தனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தால் அந்த நிதி ஆதாரத்தினைக்கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றளவில்நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாட்டினைப் போக்கலாம். நம் மாநில அரசு செய்ய முன் வருமா? கேரள பாணியைப் பின்பற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போமா....

ஆனால் கேரளாவில் வித்தியாசமாக தண்ணீருக்கென்று தனியாக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனி பட்ஜெட்.கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பொது நீர் பட்ஜெட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார், இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Updated On: 19 April 2023 3:51 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...