/* */

குளித்தலையில் ஒரேநாளில் 14 பேருக்கு விதவைச்சான்று வழங்கல்

குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி, மூன்று ஒன்றியங்களில் விதவைச்சான்று வழங்கினார்.

HIGHLIGHTS

குளித்தலையில் ஒரேநாளில் 14 பேருக்கு விதவைச்சான்று வழங்கல்
X

ஒரே நாளில் 14 பேருக்கு விதவை சான்று வழங்கிய கோட்டாட்சியர் புஷ்பா தேவி.

கரூர் மாவட்டம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு சூழ்நிலைகளால் கணவரை இழந்த ஏழை பெண்கள், ஆதரவற்ற விதவைச்சான்று வேண்டி, குளித்தலை கோட்டாட்சியருக்கு விண்ணப்பம் செய்திருத்தனர்.

கோட்டாட்சியர் புஷ்பா தேவி, ஒவ்வொருவரின் இல்லங்களுக்குச் சென்று, அந்த பெண்களின் நிலை குறித்து நேரடியாக விசாரணை மேற்கொண்டு, ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் வகையில், 14 ஆதரவற்ற பெண்களுக்கு, ஆதரவற்ற விதவைச்சான்று வழங்கினார். தொடர்ந்து ஆதரவற்ற விதவைச்சான்று குறித்த முக்கியத்துவத்தை விளக்கமாகக்கூறி, சான்றை என்ன முறையில் பயன்படுத்தலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்,

கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏழை, எளிய ஆதரவற்ற கணவரை இழந்த பெண்கள், விண்ணப்பித்து அரசு சலுகைகளை பெற முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரேநாளில் 14 பேருக்கு சான்றிதழ் வழங்கியது இதுவே முதல் முறையாகும். சான்று பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 2 Dec 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?