/* */

கரூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்த மக்கள்

கரூரில் கொரோனா தடுப்பூசி போடும் மையத்தில் அதிக அளவில் மக்க்கள். குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கரூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள  குவிந்த மக்கள்
X

கரூர் மாவட்டத்தில் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள அதிமானோர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் நகரப் பகுதியில் அமைந்திருக்கும் பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த்து.

இதையடுத்து சுமார் 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவிந்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், 150 டோஸ் தடுப்பூசி மட்டும் இருந்ததால், தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.ஏற்கனவே இந்த தேதியில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்ததால் 600க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

கரூர் மாவட்டத்தில், இதுபோன்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்களில் அதிகளவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகின்றனர். கொஞ்சம் நபர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுப்படுகிறது. அளவுக்கு அதிகமான மக்கள் குவிவதால் அங்கு பரபரப்பு ஏற்படுகிறது.

எனவே, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முறைப்படுத்தி, எவ்வளவு தடுப்பூசி வந்துள்ளதோ அதற்கு ஏற்ற வகையில், டோக்கன்கள் வழங்கி அதிக அளவில் மக்கள். கூடுவதை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை திட்டமிடவேண்டும் என்றார் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த சண்முகம்.

Updated On: 1 Jun 2021 1:30 PM GMT

Related News