/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் நகர்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் வசிக்கும் வகையில் பிரத்யோகமாக விடியல் நகர் உருவாக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் நகர்: அமைச்சர் செந்தில் பாலாஜி
X

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்,  தனது சொந்த செலவில் பேட்டரி காரை வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். 13 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, தனது தாயாருடன் வந்து குடியிருக்க வீடு இல்லை என அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். மனு அளித்த 20 நிமிட நேரத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுமி குடும்பத்திற்கு காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், கரூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக, விடியல் நகர் உருவாக்கப்பட உள்ளது. பிச்சம்பட்டி அல்லது மணவாடியில் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இடம் தேர்வு செய்யப் பெற்ற பிறகு, வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் என பேசினார்.

நிகழ்ச்சியில், ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சொந்த செலவில், பேட்டரி கார் ஒன்றை வழங்கினார்.

Updated On: 3 Dec 2021 10:00 AM GMT

Related News