Begin typing your search above and press return to search.
மின்கம்பத்தில் லாரி மோதல்: மின்வாரியத்தின் துரித நடவடிக்கையால் சேதம் தவிர்ப்பு
மின் சேவை துண்டிக்கப்பட்டது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
HIGHLIGHTS

மின் சேவை துண்டிக்கப்பட்டது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தலவாபாளையம் பகுதியில் ஜல்லி லோடு ஏற்றிக்கொண்டு குன்னம் சத்திரத்தில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் மின் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மின்கம்பம் உடைந்ததால் மின்வாரிய ஊழியர்களை அதனை சரி செய்து மீண்டும் மின்விநியோகம் மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.