/* */

மாணவி தற்கொலை: நீதிகேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கரூரில் பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

HIGHLIGHTS

மாணவி தற்கொலை: நீதிகேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

உள்ளருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவர்கள்.

கரூர் வெண்ணைமலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த 19 ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்று வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் புகார் அளிக்கச் சென்ற பெற்றோர்களை தகாத வார்த்தையில் திட்டி இரவு வரை காவல் காக்க வைத்த காவல் ஆய்வாளர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்யட்டுள்ளார்.

மாணவியின் இறப்பதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் பாலியல் கொடுமையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். என்னை இந்த முடிவை எடுக்க வைத்தவர்கள் யார் என கூற பயமாக இருக்கிறது என ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து கரூர் சைபர் ரைம் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவியின் செல்போன் கைப்பற்றி பல கோணத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக கரூர் கல்லூரி மாணவர்கள் இதற்கான போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

நேற்று, பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு பேருந்து நிலைய பகுதியில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதேவேளையில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவியின் தற்கொலைக்கு நீதிகேட்டு குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் பள்ளி நிர்வாகத்தில் தண்டிக்க கோரியும் தொடர்ந்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர் பின்னர் அவர்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க புறப்பட்டுச் சென்றனர். மாணவர்கள் பேரணியாக வருவது குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் மாணவர்களை நேரில் சென்று சந்தித்து அமைதிப்படுத்தினர்.

அப்போது மாணவர்களிடம் ஆட்சியர் பிரபு சங்கர் பேசுகையில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக கைது செய்யப்பட்டு சட்டத்தின்படி அவர்களுக்கு தண்டனை கிடைக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மாணவிகளுக்கு இதுபோன்ற பாலியல் தொல்லை ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட உள்ளது என கூறி மாணவ மாணவிகள் சமாதானப்படுத்தினர். இதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 24 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...