/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 30 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், 60 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 30 ஆண்டு சிறை
X

கைது செய்யப்பட்ட பாரதியார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பொருந்தலூரை சேர்ந்தவர் ராசு மகன் பாரதியார் 27. இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2019 ம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி அன்று 14 வயது சிறுமியை கடத்தி கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அச்சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் பாரதியாரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர் பிணையில் வெளியில் வந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரதியார் ஆஜர்படுத்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் இளைஞருக்கு கடத்தல் குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரமும் அபராதம் விதித்து நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார். இதனையடுத்து இளைஞரை போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Updated On: 22 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  2. சூலூர்
    பண பலத்தை வைத்து திமுக வெற்றிபெற பார்க்கிறது : அண்ணாமலை புகார்
  3. கல்வி
    நேர்மறை சிந்தனை வளர்க்கும் திருக்குறள்..!
  4. பட்டுக்கோட்டை
    தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
  5. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  6. வணிகம்
    கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை நிலவரம்
  7. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் தி.மு.க. அரசிற்கு எதிரான ஆய்வறிக்கை வெளியிட்ட அமைப்பு
  10. திருவள்ளூர்
    ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்